பொங்கல் திருவிழா நான்கு நாள்கள் கொண்டாடப்படும். இதில் முதல்நாள் போகி, அடுத்து தைப்பொங்கல், அதன் பின் மாட்டு பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல்(Kanum Pongal) அல்லது கன்னி பொங்கல் ஆகும்.
காணும் பொங்கல் தமிழர்களின் குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரியங்களை கொண்டாடும் நாள். சாதி, சமயம் வேறுபாடின்றி அனைவராலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்த நாள் பெண்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இந்த நாளில் மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து, பெரியோரின் ஆசிகளை பெறுவார்கள். அவர்கள் வயதான பெரியவர்களின் கால்களில் விழுந்து அன்பான ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
காணும் பொங்கலில் வீட்டில் பொங்கல் பானையை வைத்தால் அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டி வைத்து, முதியவர் அல்லது சகோதரிகள் ஐந்து பேர் கையில் கொடுத்து ஆசி பெற்று, அதை கல்லில் இழைத்து பாதம் மற்றும் முகத்தில் பூசுகின்றனர். இது பாரம்பரிய நற்செயல், நன்மை மற்றும் ஆன்மீக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு நடைமுறை.

இந்த நாளில் உறுப்பு குடும்ப உறுப்பினர்கள், உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு அழைக்கப்படுவர். அனைவருக்கும் விருந்து கொடுத்து அன்பளிப்பு பரிமாறப்படும். மக்கள் வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் செல்லும் பழக்கம், பழமையான மரபுக்கு அடிப்படையாகும். இதன் மூலம் குடும்ப உறவுகள் வலுவடைகின்றன, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுகிறார்கள்.(Online Tamil News)
பொங்கல் சாதங்கள் ஐந்து வகையாக வைக்கப்படுகின்றன, அவை குருவிக்கான அன்னம், உடன்பிறந்தவர்களின் நன்மைக்கான உணவு மற்றும் தெய்வ பண்டங்கள் ஆகும். மக்கள் கூறும் பழமொழி,
“காக்கப்பிடி வச்சேன், கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்”
என்றது, குடும்பத்தில் ஒருமை, சகோதரர்கள் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும்.
இதனால் காணும் பொங்கல் என்பது பொங்கல் விழாவின் கடைசி நாள் மட்டுமல்ல, குடும்ப உறவுகள் மற்றும் தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை வலுப்படுத்தும் ஒரு சிறப்பு திருவிழா


