சமூக ஊடகங்கள் வழியாக எளிய மக்கள் தினசரி பல்வேறு செய்திகளை அறிந்து, அவற்றை பரப்பி வருகின்றனர். ஆனால், அவற்றின் உண்மை தன்மையை சரியாக அறியாமலே, பல்வேறு விவாதங்களும் தவறான தகவல்கள் தொடர்பான சம்பவங்களும் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. இதனால் சில சமயங்களில் தவறான புரிதல்கள், பொய்யான தகவல்களின் பரவல் மற்றும் சமூக பிரச்சினைகள் உருவாகும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் இன்று சமூக ஊடகங்களில் பேசும்பொருளாகியுள்ளது.
கேரள மாநிலம் (Kerala), கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தொடர்ந்து, அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணையில் பய்யன்னூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும்போது, கூட்டம் நிறைந்த பேருந்தில் தீபக், தன்னை தவறாக தொட்டதாக ஒரு பெண் சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்படுகிறது.

வீடியோ வெளியான பின்னர், அந்த நபர் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக குணநலன் படுகொலை நடத்தப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீஸார் இயற்கையற்ற மரணம் என வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்குக் காரணமான சூழ்நிலைகள் மற்றும் வைரல் வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(Online Tamil News)
பேருந்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக சமூக ஊடகங்களில் வெளியான வைரல் வீடியோவால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக 40 வயதுடைய தீபக் (Deepak) தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடையே பெரும் பேசும்பொருளாகியுள்ளது.


