பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோருக்கு இடையிலான தந்தைமை வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது மரபணு சோதனை எனப்படும் டிஎன்ஏ அறிக்கையின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது டிஎன்ஏ சோதனையில் நான்தான் தந்தை என்று தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்கத் தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது இந்த அறிக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியஸ்தக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் எட்டாம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.(Online Tamil News)


