மணிப்பூரில் (Manipur) புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே, மாநிலத்தில் மீண்டும் கலவர சூழ்நிலை உருவாகியுள்ளது.
குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென், குகி சமூகத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய மாநில அரசில் இணைந்ததாக கூறி, அந்த சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தின் துய்போங் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு முழக்கங்கள் எழுப்பியதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.(Manipur Violence)
நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், மக்கள் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(Online Tamil News )
ஏற்கனவே இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், புதிய அரசு அமைந்த உடனேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதால், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவலையை அதிகரித்துள்ளது.


