அய்யா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமாக ’அய்யா பாமக (APMK)’ என்ற தனிக்கட்சியை தொடங்க உள்ளார் ராமதாஸ். இக்கட்சியுடன் சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் AIPMMK கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் நெருக்கத்தில் இனியும் சட்டப்போராட்டத்தை நம்பி பிரயோசனம் இல்லை. அதையே நம்பிக்கொண்டிருந்தால் அன்புமணிக்கு எதிராக வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க முடியாது என்பதை உணர்ந்த ராமதாஸ் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக, ’அய்யா பாமக (APMK)’’ என்ற பெயரை உடனே தேர்தல் ஆணையம் பதிவு செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்சியை பதிவு செய்தால் தான் ’அய்யா பாமக’வுக்கு பொது சின்னம் கிடைக்கும் என்பதால், அவசர அவசராமக தேர்தல் ஆணையம் சென்றபோது, புதிய கட்சியின் முகவரி தவறாக இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்.

அய்யா பாசறை மக்கள் கட்சி, 2026 தமிழக தேர்தலில் நாங்கள் போட்டியிட்டே ஆக வேண்டும். அதற்காக, உடனடியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அருள் மனு செய்திருந்தார். இதற்கு தீர்வு காணுமாறு கூறி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
பாமக யாருக்கு? என்று ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நடந்து வந்தபோதே ஒருவேளை அன்புமணி வசம் சென்றுவிட்டால் என்னாவது? என்று முன்கூட்டியே யோசித்துதான் கடந்த நவம்பர் மாதத்திலேயே தனிக்கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறார் ராமதாஸ். முன்பிருந்த பாமக கொடியின் நடுவே ராமதாஸ் படம் இருக்க புதுக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது.
’அய்யா பாமக’ கட்சி பெயர் பாமகவின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் மகன் முகிலன் பெயரில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



