சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) என்பவர் லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் 2ஆவது மகன். 53 வயதான அவர், புதன்கிழமை தனது வீட்டில் இருந்தபோது 4 துப்பாக்கியாளர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் முதலில் பாதுகாப்பு கேமராக்களை முடக்கி, பின்னர் Saif al-Islam Gaddafi-யை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தகவலை அவரது அரசியல் ஆலோசகரும், வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள Zintan என்ற நகரத்தில் நடந்துள்ளது. இந்த கொலையை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saif al-Islam Gaddafi, தனது தந்தை ஆட்சியில் முக்கிய அரசியல் நபராக இருந்தார். வெளிநாடுகளில் கல்வி பெற்ற அவர், லிபியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த முயன்றார். ஆனால் 2011-ம் ஆண்டு லிபியாவில் மக்கள் போராட்டம் ஏற்பட்ட போது, தந்தையின் ஆட்சியை காக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல்வேறு சர்ச்சைகளும், கடும் விமர்சனங்களும் எழுந்தன.(Online Tamil News)

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டதாகக் கூறி, 2015-ம் ஆண்டு லிபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் 2017-ம் ஆண்டு பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் 2021-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அவரின் பழைய குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.


