பிரபல பின்னணிப்பாடகி ஜானகிக்கு ஒரே மகன் முரளி கிருஷ்ணா. உடல்நலக்குறைவால் அவர் இன்று யிரிழ்ந்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்த ஜானகி, தனது மூன்று வயதில் இருந்தே பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களின் பாடல் பதிவும் சென்னையில் நடந்து வந்ததால் சென்னையிலேயே செட்டிலானார் ஜானகி. 1959ல் ராம் பிரசாத்தை திருமணம் செய்துகொண்ட ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் பிறந்தார். சில படங்களில் நடித்ததன் மூலமாக நடனக்கலைஞர் உமாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டார் முரளி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
மனைவியுடனான விவகாரத்திற்கு பின்னர் தாய் ஜானகியுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த முரளி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.



