அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கெய்ன்ஸ்வில் பகுதியில் போக்குவரத்து நிறைந்த ஒரு பரபரப்பான சாலையில், சிறிய ரகப் பயிற்சி விமானம் ஒன்று திடீரெனத் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பயிற்சி விமானம் தனது பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரெனப் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் விமான நிலையத்திற்குச் செல்ல முடியாத நிலை உருவானது. இதனால் வேறு வழியின்றி விமானி அந்த விமானத்தைச் சாலையிலேயே அவசர அவசரமாகத் தரையிறக்க முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர்கள் (Dividers) மற்றும் அங்குச் சென்று கொண்டிருந்த கார்கள் மீது தறிகெட்டு ஓடிப் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பல கார்கள் பலத்த சேதமடைந்தன.(Online Tamil News)
மேலும், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயமாக அமைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வரும் நிலையில், விபத்தைத் தொடர்ந்து அந்தச் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


