• அரசியல்
    அரசியல்Show More
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    2026-04-01
    Shell petrol price hike India
    போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
    2026-04-01
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    2026-04-01
    Oracle layoffs 2026
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
    US -President-Trump-lawsuit-Florida court-BBC-90,000 crore rupees
    உலகம்
    BBC செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்…ஏன் ?
    2025-12-16
    Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
    உலகம்
    அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
    2025-12-10
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: பழைய CPS Vs புதிய TAPS ஓய்வூதியத் திட்டம்..சிறப்பம்சங்கள் என்னென்ன?
Share
28°C
Chennai
mist
28° _ 27°
78%
3 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

பழைய CPS Vs புதிய TAPS ஓய்வூதியத் திட்டம்..சிறப்பம்சங்கள் என்னென்ன?

Laila Murugan
Last updated: 2026-01-03 1:03 pm
Laila Murugan Laila Murugan 58 Views
Share
Tamilnadu-Assured-Pension-Scheme–TAPS-CPS-MKStalin-govt-employees-tnpolitics-political-news
SHARE

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவர்கள். அவர்கள் பணிக்காலத்தில் நேர்மையாகவும், பொறுப்புடனும் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே ஒரு நல்ல அரசின் கடமை. அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது.

Contents
1. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்2. 10 வருட பணிக்காலம் இருந்தால் ஓய்வூதியம்3. அகவிலைப்படி (DA) உயர்வு4. குடும்ப ஓய்வூதியம் – 60%5. பணிக்கொடை (Gratuity)6. CPS-இல் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்1. ஓய்வூதிய உறுதி2. ஊழியரின் நிம்மதி3. குடும்ப பாதுகாப்பு4. அகவிலைப்படி (DA)5. பணிக்கொடை

இந்தத் திட்டம், கடந்த இருபது ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் எதிர்கொண்டு வந்த ஓய்வூதியத் தெளிவின்மையை அகற்றும் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

ஏன் புதிய ஓய்வூதியத் திட்டம் தேவைப்பட்டது?

2003-04 காலகட்டத்திற்கு முன், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) கீழ் பணியாற்றினார்கள். அந்தத் திட்டத்தில்:

  • கடைசி மாத ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக உறுதி
  • அரசு முழுமையாக ஓய்வூதியச் செலவை ஏற்றது
  • ஓய்வூதியத் தொகை எவ்வளவு என்று முன்கூட்டியே தெரியும்

ஆனால், அதன் பிறகு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் (CPS-Contributory Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில்:

  • ஊழியரும் அரசும் பங்களிப்பு செலுத்த வேண்டும்
  • ஓய்வூதியம் சந்தை முதலீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது
  • ஓய்வு பெறும் போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தெளிவில்லாமல் இருந்தது

இதனால், “ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாத நிலை” கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்தது. இதை மாற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – முக்கிய அம்சங்கள்

1. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்

  • அரசு ஊழியர்கள் தங்களது கடைசி மாத ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக உறுதியாக பெறுவார்கள்
  • இதற்காக ஊழியர்களிடம் 10% ஊதியப் பங்களிப்பு பெறப்படும்
  • மீதமுள்ள தேவையான நிதியை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுக் கொடுக்கும்

2. 10 வருட பணிக்காலம் இருந்தால் ஓய்வூதியம்

  • குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியத் தகுதி வழங்கப்படும்
  • தகுதி காலம் நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்

3. அகவிலைப்படி (DA) உயர்வு

  • ஓய்வூதியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை
  • பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவேஅகவிலைப்படி DA- Dearness Allowance உயர்வு வழங்கப்படும்

4. குடும்ப ஓய்வூதியம் – 60%

  • ஓய்வூதியதாரர் இறந்தால்
  • அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு
  • அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தின் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்

5. பணிக்கொடை (Gratuity)

  • ஓய்வு பெறும் போதும்
  • பணிக்காலத்தில் மரணம் அடைந்தாலும்
  • பணிக்காலத்தைப் பொறுத்து
  • அதிகபட்சம் ₹25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்

6. CPS-இல் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்

  • CPS கீழ் பணியில் சேர்ந்து
  • TAPS அமலுக்கு வருவதற்கு முன்
  • ஓய்வூதியம் இன்றி ஓய்வு பெற்றவர்களுக்கு
  • சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய CPS திட்டம் VS புதிய TAPS – ஒப்பீடு

முன்னைய CPS திட்டத்தை புதிய TAPS திட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கு பெரும் பலன்களை தந்துள்ளது.

1. ஓய்வூதிய உறுதி

CPS:

  • ஓய்வூதியம் சந்தை முதலீட்டைப் பொறுத்தது
  • உறுதி இல்லை

TAPS:

  • கடைசி ஊதியத்தின் 50%
  • முழுமையான உறுதி

2. ஊழியரின் நிம்மதி

CPS:

  • ஓய்வு பெறும் வரை எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தெரியாது
  • மனஅழுத்தம்

TAPS:

  • ஓய்வு பெறும் நாளில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியும்
  • நிம்மதியான வாழ்க்கை

3. குடும்ப பாதுகாப்பு

CPS:

  • குடும்ப ஓய்வூதியம் முழுமையாக உறுதி இல்லை

TAPS:

  • குடும்பத்தினருக்கு 60% ஓய்வூதியம்
  • உறுதியான சமூக பாதுகாப்பு

4. அகவிலைப்படி (DA)

CPS:

  • ஓய்வூதியத்தில் DA உயர்வு முழுமையாக தெளிவில்லை

TAPS:

  • அரசு ஊழியர்களுக்கு இணையாக
  • ஆண்டுக்கு இருமுறை DA உயர்வு

5. பணிக்கொடை

CPS:

  • வரம்பு குறைவு

TAPS:

  • அதிகபட்சம் ₹25 லட்சம்
  • ஓய்வு அல்லது மரணம் இரண்டுக்கும் பொருந்தும்

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கனவையும், நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம் ஆகும்.

கடுமையான நிதிச் சூழலிலும், ரூ. 23,000 கோடி ஒருமுறை செலவு, ஆண்டுதோறும் கூடுதல் நிதிச்சுமை. இவையனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டு, அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முன்வந்துள்ளது.

இந்தத் திட்டம்:

  • அரசு ஊழியர்களுக்கு நிச்சயமான ஓய்வூதியம்
  • குடும்பங்களுக்கு பாதுகாப்பு
  • சமூகத்திற்கு நம்பிக்கை

என்ற மூன்றையும் ஒருசேர வழங்குகிறது. அதனால், TAPS என்பது “அரசு ஊழியரின் உழைப்பிற்கு அரசு வழங்கும் நியாயமான பலன்கள் என்று சொல்லலாம்.

TAGGED:cpsmkstalinpensionschemetamilandunewstapstngovttnpolitics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article IIT Hyderabad-Student-Achievement-Highest Package-Education News-Placement News- ரூ.2.50 கோடி சம்பளத்தில் வேலை – அசத்தும் இந்திய மாணவர் !
Next Article US Foreign Policy-Venezuela Oil-Trump Administration-Regime Change-Anti-Imperialism-BRICS Nations-India–US Relations-Global Power Politics தலையங்கம் : அமெரிக்காவின் அடாவடி

உலகம்

Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

seeman
விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
Apr 1, 2026 at 6:40 pm
Shell petrol price hike India
போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
Apr 1, 2026 at 5:59 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?