வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மறைமுகமாக பலமுறை உணர்த்தியும் கேட்காததால் கட்சியின் சீனியர்கள் 5 பேருடன் சென்று நேரிலும் வலியுறுத்தினார் செங்கோட்டையன்.
அப்படியும் வழிக்கு வராததால், வேறு வழியின்றி பொதுவெளியில் இந்த கோரிக்கையை வைத்து, அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார் பழனிசாமி. 10 நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க தொடங்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தார்.

இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளை எல்லாம் பறித்துள்ளார்.
இது குறித்து மனம் திறந்துள்ள செங்கோட்டையன், ‘’அதிமுகவில் ஒருங்கிணைப்பு முழக்கத்தை முன்வைத்து தொண்டர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள். என் போன்றவர்கள் இந்த கருத்துக்களை வெளிப்படுத்துவது இந்த இயக்கத்திற்கு நலம் தரும் என்ற நோக்கில்தான் கருத்து தெரிவித்தேன். அது குறித்து ஒரு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் எதுவும் கேட்காமலேயே நீக்கி இருக்கிறார். அவரிடம் ஜனநாயகம் இல்லை’’ என்று குற்றம் சாட்டுகிறார்.



