கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து பாலாய்ப்போகும் ரசிகர்களுக்கு , விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பாடமெடுத்திருக்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். HOTSPOT 2 படத்தின் Sneak Peek காட்சி யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி அது வைரலாகி வருகிறது.

ஹாட்ஸ்பாட்-2 காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி அளிப்பது மாதிரியான காட்சி. அதில், ‘’நானும் உங்களை மாதிரியே ஒரு நடிகருக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைச்சேன். 15 வயசுல ரசிகர் மன்றத்துல சேர்ந்தேன்.
அவர் நடிச்ச எல்லா படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன். அவரப்பத்தி யாராவது தப்பா பேசுனா அடிச்சு மூஞ்சு முகரை எல்லாம் உடைச்சிடுவேன். அவ்வளவு வெறி. புள்ளகுட்டி , குடும்பத்தை பார்க்கல, ஒருநாள் அவருக்கு பேனர் கட்டும்போது கீழே விழுந்து பலத்த அடி. வேற வழியில்லாம என் பொண்டாட்டி தன் உடம்ப வித்து காப்பாத்துனா. அதே மாதிரிதான் உனக்கும்.

உனக்காக எதுவும் செய்யாத அவனுக்காக உன் வாழ்க்கையை கவனிக்காம அடுத்தவன் குடும்பத்தை அசிங்கம் அசிங்கமா திட்டிக்கிட்டு..ஏண்டா பைத்தியக்காரங்களா? இன்னும் எத்தனை வருசத்துக்குடா இப்படியே இருப்பீங்க?
நாம காசு கொடுத்து பார்க்குறதால அவன் வாழுறான். நாமதான அவனுக்கு முதலாளி. நீ ரசிகனாக இருக்குற எந்த ஒரு நடிகனோட புள்ளையாவது இன்னொரு நடிக்கனுக்கு கட் அவுட் வச்சி அவனோட வாழ்க்கையை நாசப்படுத்திக்கிட்டு இருக்கானா?’’ என்று விளாசும் பாஸ்கர்,
‘’ஒருத்தன் உசுர ஒருத்தன் காப்பாத்துனா அவன் ஹீரோ, நாலு பேருக்கு பசிக்கு சோறு போட்டான்னா அவன் ஹீரோ, தான் படிக்கலேன்னாலும் 10 பேர் படிக்குறதுக்கு பள்ளிக்கூடத்த கட்டுனான்னா அவன் ஹீரோ . மத்ததெல்லாம் ஒண்ணுமில்ல’’ என்கிறார்.



