விஜய்க்கு எனக்கு துரோகம் செய்துவிட்டார். நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டார் என்று அவரிடம் பல வருடங்கள் வேலை பார்த்தவர்கள் வேதனைப்படுவது ஒருபுறம் இருக்க, விஜய் எனக்கு துரோகம் செய்துவிட்டார் அவரின் மனைவியே கோர்ட் படி ஏறி இருக்கிறார்.
துரோகம் செய்துவிட்டார் என்று சொன்ன சங்கீதாவை வொர்த் இல்லை என்கிறாரே விஜய்?இருவருக்குள்ளும் என்ன நடந்தது? 27 வருடங்கள் விஜய்யுடன் பயணித்த அவரிடம் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார் இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார்.

’’விஜய் யாரையும் மதிக்க மாட்டார் என்பதை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவரை நம்பி யாரும் செல்லாதீர்கள். எதுக்குமே உதவாத ஒரு நபர் உண்டென்றால் அவர் விஜய்.
வெளிநாட்டில் இருந்து உன்னை நம்பி வந்து திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்ற சகோதரி சங்கீதாவை கைவிட்டு, நீ மகளிர் தினம் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்.
நான் வந்தால் பெண்களுக்கு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று கூற உனக்கு என்ன தகுதி உள்ளது.
விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் சங்கீதாவுடன் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். விஜய் – சங்கீதா திருமணம் ஆன காலம் தொட்டு அந்த வீட்டில் இருந்து பார்த்தவன் என்பதால் இதை சொல்கிறேன்.

சங்கீதாவை பொருத்தவரை ஒரு அமைதியான குடும்ப பாங்கான பெண். ஆனால், இன்றைக்கு சங்கீதா ஒர்த் இல்லாதவர் என பெண்கள் மத்தியில் பேசுகிறார் என்றால் அவரது துரோக உள்ளத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
பணமும், புகழும் இருந்தால் எதையும் பேசலாம் என நினைக்கிறார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
உன் கேரக்டரைப் பற்றி தெரியாத ஒரு தற்குறி கூட்டம், உன்னை சுற்றியுள்ளது. செங்கோட்டையன் போன்றவர்கள் தெரியாமல் உன்னை நம்பி வந்து சிக்கித் தவிக்கிறார்கள்.

உனது ரசிகர்கள் கொஞ்சம், கொஞ்சமாக உன்னை விட்டுச் செல்லும் காலம் கண்முன்னே தெரிகிறது.
மகளின் பட்டமளிப்பு விழாவுக்கு கூட செல்லாமல், திரிஷாவுடன் ஊர் சுற்றுகிறார். இது ஆணவத்தின் உச்சம். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது.
உன்னை நம்பி விபத்தில் சிக்கிய சாதாரண ஏழை பால் வியாபாரி மகன் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். விஜய்யை நம்பி செல்லாதீர்கள். அவர் எந்த சூழ்நிலையிலும் திருந்தப்போவது இல்லை.’’



