நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதிலும் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் முதன் முதலாக ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

ஆங்கில ஊடகம் என்.டிடிவிக்கு அளித்திருக்கும் அந்த நேர்காணலில், கிங் மேக்கராக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு, ’’ நான் அரசியலில் கிங் மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. 2026 தேர்தலில் வெற்றி பெறுவேன் என்கிற சூழல் இருக்கும் போது நான் எதற்காக கிங் மேக்கராக இருக்க போகிறேன். எனக்கு வரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார் விஜய்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் ‘கிங் மேக்கர்’ என்றால் அது காமராஜர்தான் என்பது நிலைத்திருக்கும் நிலையில், கிங், கிங்மேக்கர் என்று விஜய் பேட்டியால் அதிர்ச்சியான காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், ’’கிங், கிங்மேக்கர் என்று பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும். அதெல்லாம் போய் ரொம்ப நாளாகிறது. எல்லோரும் சிட்டிசனாக மாறி விட்டனர். யாரும் கிங்குக்கு கீழ் வாழ ஆசைப்படவில்லை. நல்ல அரசியல் செய்யுங்கள். மக்களை சிந்தியுங்கள்’’ என்று கண்டம் தெரிவித்திருக்கிறார்.



