தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் முதல் நாள் 30.3.2026 அன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் புடைசூழ சாலைவலம் வந்தார். சாலையின் இருபுறமும் நின்று ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.

விஜய் சென்ற பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து அவரது தொண்டர்கள் பைக்கில் சென்னர். பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, விஜய்யின் பிரச்சார வாகனத்தின் முன்னே சென்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் பைக் மோதியதில் அந்த பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் கீழே விழுந்தனர். இதைப்பார்த்துவிட்ட விஜய் உடனே கீழே இறங்கி அவரை நோக்கி நடந்தார்.

விஜய் திடீரென்று வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்ததால் பாதுகாவலர்களும் இறங்கி ஓடினர். அந்த இடம் பரபரப்பானது.

கீழே அந்த ஆணிடமும் பெண்ணிடமும் சென்று விபத்து குறித்து விசாரித்துவிட்டு ஆறுதல் கூறிவிட்டு பின்னர் மீண்டும் பிரச்சார வேனில் சென்று கையசைத்துச் சென்றார்.



