கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இது வரை தவெக தலைவர் விஜய் மூன்று முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் -23ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் அடிக்கடி டெல்லிக்கு விசாரணைக்காக செல்ல இயலாது என்பதால் அடுத்தடுத்த விசாரணையை சென்னையில் நடத்தக்கோரி சிபிஐக்கு விஜய் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இந்த விசாரணையை கவனிக்கும் சிறப்பு குழுவின் தலைமை பொறுப்பில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிக்கும் இதே கோரிக்கை கடிதத்தை அனுப்பி இருக்கிறார் விஜய்.
டெல்லியில் நேற்று நடந்த விசாரணை காலை 10.30க்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிந்துள்ளது. ஒவ்வொரு முறை விசாரணையும் 7 மணி நேரம் அல்லது அதற்கு மேல் நடைபெறுவதால் இதில் டெல்லிக்கு வேறு சென்று வர பயணம் நேரம் வேறு இருப்பதால் விசாரணையை சென்னைக்கு மாற்றக் கோரி இருக்கிறார் விஜய்.
சிபிஐ மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமயிலான குழு விஜய்யின் இந்த கோரிக்கையை ஏற்கிறதா? நிராகரிக்கிறதா? என்பது தெரியும் பரபரப்பில் இருக்கிறது தவெக.



