நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா. இவர் இலங்கைத் தமிழர். இவரது தந்தை சொர்ணலிங்கம். தாய் நிர்மலா சொர்ணலிங்கம்.
இலங்கை யாழ்ப்பானத்தை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலிங்கம் லண்டனில் பெரும் தொழிலதிபர். அவரின் மகள் சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர் . லண்டன் பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் பி.எஸ்.சி. படித்தவர் சங்கீதா.

1978ல் பிறந்த சங்கீதாவுக்கு தற்போது 48 வயது ஆகிறது. தனக்கு பிறகு தன் தொழிலை தன் மகள் சங்கீதா கவனித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் சொர்ணலிங்கம். விஜய்யை திருமணம் செய்து கொண்டதால் அது முடியாமல் போனது. குடும்பத் தலைவியாக மட்டுமே இருந்து வந்தார் சங்கீதா. இப்போது விவாகரத்து முடிவுக்கு வந்துவிட்டதால் லண்டன் சென்று தந்தை ஆசைப்பட்டபடியே தொழிலை கவனித்து வருகிறார். சங்கீதாவுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தகவல்.
‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். குறிப்பாக உலகம் முழுவதும் பெண் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது. அந்த பெண் ரசிகைகளில் ஒருவர்தான் சங்கீதா. பூவே உனக்காக படத்தை பார்த்துவிட்டு விஜய்யின் தீவிர ரசிகை ஆனார். விஜய்யிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்று துடித்து லண்டனில் இருந்து தன் அக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சந்தித்து பேசினார் சங்கீதா. படப்பிடிப்பு முடிந்ததும் சங்கீதாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.
அந்த முதல் சந்திப்பிலேயே விஜய்யின் பெற்றோரிடம் நன்றாக பழகிவிட்டார் சங்கீதா. அடுத்தடுத்து சென்னை வந்தபோது நேரடியாகவே விஜய் வீட்டிற்கு வந்து ஷோபா – சந்திரசேகரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார் சங்கீதா. தன் மகனை காதலிக்கிறார் என்பதை புரிந்துகொண்ட
சந்திரசேகரும் ஷோபாவும் அதை நேரடியாகவே சங்கீதாவிடம் கேட்க, அவர் சம்மதம் சொல்ல, சந்திரசேகரும் ஷோபாவும் லண்டன் சென்று சங்கீதாவின் பெற்றோரிடம் முறைப்படி பேசி திருமணத்தை முடிவு செய்தனர். லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சங்கீதாவுக்கு வைரமோதிரம் பரிசளித்தார் விஜய்.
25.08.1999இல் விஜய் கிறிஸ்து என்பதாலும், சங்கீதா இந்து என்பதாலும் முறையே இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.

விஜய்யின் நட்பு வட்டம் ரொம்ப சிறிது. 6 நண்பர்கள்தான் இருக்கிறார்கள். சங்கீதா அப்படி அல்ல. திரைத்துறையிலேயே அஜித் மனைவி ஷாலினி, இயக்குநர் ஷங்கர் மனைவி, ரவி மோகன் மனைவி ஆர்த்தி, ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி என்று பலருடன் நட்புறவில் உள்ளார் சங்கீதா.
27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நடிகையுடன் விஜய்க்கு உள்ள உறவைக் கண்டு, அதை கண்டித்தும் அவர் அந்த நடிகையுடன் உறவை தொடர்வதால் வேதனை அடைந்து லண்டனுக்கு சென்று தன் குடும்ப சொத்துக்களையும் தொழிலையும் நிர்வகித்து வருகிறார். விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார் சங்கீதா.

400 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் சங்கீதாவுக்கு விவாகரத்து விவகாரத்தால் ஏற்கனவே விஜய் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை ஜீவனாம்சமாக கொடுப்பதாக பேசியிருக்கிறார் என்கிறது தகவல்கள்.



