உலக தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் கீழடியில் 43 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் சங்கம் நிகழ்ந்தது.
தமிழர்களின் மரபை உலகிற்கு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியது கீழடி ஆய்வுகள். அதனால் உலகம் முழுவதும் அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 43 நாடுகளில் வாழும் தமிழர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்கமித்து தமிழர்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

பாரம்பரிய உடை அணிந்து, கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தி , கபடி, சிலம்பம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் ஆடி இந்த பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் அனைத்து மதத்தினரும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தில் நடந்த உலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டின் நிறைவாக இந்த ஒற்றுமை பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.



