மலேசியா பாராளுமன்றத்தில் அமைச்சராக செயல்படும் டாக்டர் சுல்கிப்லி ஹசன் (Zulkifli Hasan), ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அவர் கூறியதாவது, வேலை அழுத்தம், சமூக தாக்கம், மத வழிபாடு இல்லாமை போன்றவை, ஒருவரை LGBT நடத்தை (ஓரினச் சார்ந்த நடத்தை) நோக்கிச் செல்லும் ஒரு காரணியாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் 2017‑ல் Sulaiman et al. என்ற ஆய்வை மேற்கோள் காட்டி, சில தனிப்பட்ட மற்றும் சமூக காரணிகள் ஒரே நேரத்தில் செயல்பட்டால் ஓரினச் சார்ந்த நடத்தை ஏற்றுக்கொள்ளப்படக்கூடும் என்று கூறப்பட்டதாகவும் விளக்கினார். அவர் குறிப்பிட்டது, சமூக அழுத்தம், பாலியல் அனுபவங்கள், வேலை அழுத்தம் மற்றும் மத வழிபாட்டின்மை ஆகியவை ஒரே நேரத்தில் இருந்தால் இதற்குத் தாக்கம் ஏற்படலாம் என்பது.
வேலை அழுத்தம், சமூக சூழல், மத வழிபாடு இல்லாமை போன்ற பல காரணிகள் ஒரே நேரத்தில் வந்தால், ஒருவரின் பாலின பழக்கவழக்கங்களில் சற்று தாக்கம் இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன என்றும் அதாவது, சமூக அழுத்தம், பாலியல் அனுபவங்கள், வேலை அழுத்தம், மத வழிபாடு இல்லாமை போன்ற பல காரணிகள் ஒரே நேரத்தில் வந்தால், ஒரு மனிதனின் நடத்தையில் அதற்கான பாதிப்பு இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். (Online Tamil News)

இந்த கருத்து வெளிவந்தவுடன், மலேசிய மக்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பெரும் விமர்சனத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் இந்த கருத்தின் அறிவியல் ஆதாரத்தை கேள்விக்கு எடுத்துள்ளனர்.
மனித உரிமை போன்ற சில அமைப்புகள் இதை தவறான தகவல் என குறிப்பிடுகின்றன. ஆய்வியல் ரீதியாக, ஒருவரின் வேலையால் அழுத்தம் அல்லது சூழல் காரணிகளால் ஒருவரின் பாலினப் பழக்கவழக்கங்கள் மாறாது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், உலக சுகாதார அமைப்பும், பல மருத்துவ மற்றும் மனநல அமைப்புகளும், பாலின ஈர்ப்பு மனித அடையாளத்தின் இயற்கையான பகுதியே என்பதைக் குறிப்பிடுகின்றனர்.
மேலும் மலேசியாவில் ஒற்றை பாலின உறவுகள் இன்னும் சட்டப்படி தவிர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக, அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இடையில் இது தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது. மேலும் அரசியல், மத, மற்றும் சமூக பின்னணி காரணிகளின் அடிப்படையில், இந்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


