திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை நிறுவினார் எம்.ஜி.ஆர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் டிடிவி தினகரன் ’அமமுக’வை தொடங்கினார். பன்ருட்டி ராமச்சந்திரன் ’எம்.ஜி.ஆர். அதிமுக’வை தொடங்கி உள்ளார். சசிகலா ஒரு கட்சியை தொடங்கி அந்த கட்சிக்கு பெயர் வைக்காமலேயே கருப்பு சிவப்பு கொடியின் நடுவே அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவம் உள்ள கட்சியின் சின்னத்தை அறிவித்திருக்கிறார். பெங்களூரு புகழேந்தியும் இப்போது ‘ புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

‘’நானும் ஒரு கட்சியை தொடங்கி இருக்கிறேன் என்று சொல்லாமல், முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்’’ என்று சசிகலாவை கிண்டலடித்திருக்கிறார்.

தனது கட்சியின் பெயரில் உள்ள புரட்சி என்ற வார்த்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைக் குறிக்கும் என்கிறார் பெங்களூரு புகழேந்தி.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ்சின் அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவில் இருந்தார். ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் திமுகவுக்கு சென்றுவிட்டதால் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.



