சிபிஐ விசாரணைக்காக தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் தவெக தலைவர் விஜய்.
முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் பயணம் செய்ய முற்பட்டபோது மத்திய பாதுப்பு படை அதிகாரிகளின் சோதனைக்கு ஆளானபோது சிக்கினார். இதனால் விமானம் புறப்பட 40 நிமிடங்கள் தாமதம் ஆகி இருக்கிறது.

விஜய்யின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததால் அது சோதனையில் தெரியவந்ததால் மேற்கொண்டு சோதனை மற்று விசாரணையினால் 20 நிமிடங்கள் விமானம் புறப்பட தாமதம் ஆனது என்று முதற்கட்டம் தகவல் வர, அடுத்து வந்த தகவலில் ஆதவ் அர்ஜூனா பையில் மது பாட்டில் இருந்ததுதான் விமான தாமதம் என்று தகவல் வந்தது.

நடந்தது என்ன? நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 7 பேருடன் விஜய் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் சோதனையில் தனது கைப்பையை ஸ்கேன் செய்வதற்காக உதவியாளரிடம் கொடுத்துவிட்டு தனி விமானத்தில் ஏறி அமர்ந்தார் விஜய். ஸ்கேனில் கைப்பையில் சிறிய கத்தரிக்கோல் இருந்ததால் விஜய் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். மேற்கொண்டு கைப்பையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றதா என்று சோதனை செய்து அதன் பின்னர் விஜய்யை விமானத்தில் ஏற அனுமதித்தனர் பாதுகாப்பு படை அதிகார்கள். இதனால் 20 நிமிடம் தாமதம் ஆனது.
இதற்குள் ஆதவ் அர்ஜூனா பையில் மது பாட்டில், அதாவது உயர்ரக விஸ்கி இருந்தது கண்டறியப்பட்டதால் அது தொடர்பான விசாரணை நடந்திருக்கிறது. இதனால் 20 நிமிடம் தாமதம் ஆகி இருக்கிறது.
தனி விமானம் என்பதால் விஸ்கி மற்றும் கத்தரிக்கோல் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் தனி விமானத்திலும் அதற்கு அனுமதி இல்லை என்று தெரியவந்திருக்கிறது.
விமானத்தில் ஏறச்சென்ற விஜய் இறக்கிவிடப்பட்டு 40 நிமிடங்கள் விமானம் புறப்படாமல் இருந்ததால் அவரை வழியனுப்ப வந்தவர்கள் விமான நிலையத்தில் பதற்றமடைந்தனர். பின்னர்தான் 40 நிமிட தாமதத்திற்கான காரணம் தெரியவந்திருக்கிறது.



