• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    America-immigration-policies-H-1Bvisa-workers-employment-legal-world-news
    உலகம்
    அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
    2025-12-23
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : விஜய்யை சிக்க வைத்த நிர்வாகிகள்
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : விஜய்யை சிக்க வைத்த நிர்வாகிகள்

Rohini R
Last updated: 2026-01-07 4:56 am
Rohini R Rohini R 40 Views
Share
Actor Vijay-TVK-Karur Meeting-Karur Stampede-CBI Investigation-Political Accountability-Crowd Mismanagement-Tamil Nadu Politics-DMK-Political Rallies-Vijay Politics
SHARE

அரசியல் கட்சி என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான நிரந்தர அடையாளமாக மாறியிருக்கிறது கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம். கடந்த 2025 செப்டம்பரில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், நாமக்கல்லில் பகல் நேரத்தில் பேசிவிட்டு, இரவு நேரத்தில் கரூருக்கு வந்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். நீண்டநேரம் மக்களும் ரசிகர்களும் காந்திருந்ததும், அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததும், நடிகர் விஜய் (Actor Vijay) அங்கு வந்தபோது அவரைப் பார்ப்பதற்காக ஏற்பட்ட நெரிசலுமே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்றாலும், அவரது கட்சி நிர்வாகிகள் தரப்பில், ஆளுங்கட்சியான தி.மு.க மீது பழிபோடப்பட்டது. சிகிச்சை, போஸ்ட்மார்ட்டம், நிவாரணத் தொகை என ஒவ்வொன்றையும் சதிக்கோட்பாடாக த.வெ.க.வினர் முன்வைத்தனர்.

இந்த கரூர் (Karur) உயிர்ப்பலிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கரூர் மாவட்ட அரசு நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகிகளையும் சி.பி.ஐ. டெல்லிக்கு அழைத்து விசாரித்தது. தாங்கள் கேட்ட இடத்திற்குப் பதில் வேறு இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்ததால்தான் இந்த நெருக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும், கட்சியின் தேர்தல் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்துள்ளனர். த.வெ..க நிர்வாகிகள் கேட்ட இடத்தைவிட, பெரிய இடமாகவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஆவணங்களுடன் சமர்ப்பித்துவிட்டது. முதலில் கேட்ட  இடத்தை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் பார்க்கவுமில்லை, அங்கே எத்தனை பேர் அளவுக்குத் திரள முடியும் என்பது பற்றியும் விவரமும் அறியவில்லை என்பது அவர்களை சி.பி.ஐ. விசாரித்தபோதே தெரிந்துவிட்டது.

மாலை 7 மணி முதல் 10 மணி வரை விஜய் வருகை குறித்து காவல்துறையிடம் அனுமதி வாங்கிய த.வெ.க. நிர்வாகிகள், ஏன் மதியம் 12 மணிக்கே விஜய் வருவார் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டார்கள் என்பதையும், 12 மணி முதல் 7 மணி வரை மக்கள் காத்திருந்ததால்தான், நீர்ச்சத்து குறைபாடும் நெருக்கடியால் மயக்கமும் ஏற்பட்டது என்பதையும் பற்றி சி.பி.ஐ. விசாரித்தபோது, த.வெ.க. நிர்வாகிகளிடம் உரிய பதிலில்லை. அந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்களுக்கு மட்டும்தான் என்று விசாரணைக்குட்பட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறிவிப்பில் கட்சித் தொண்டர்களுக்கு மட்டும் என்றோ, கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் என்றோ எந்த வார்த்தையும் இடம்பெறாததையும், மதியம் 12 மணி எனப் பொதுவாகத் தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்களும் திரண்டு வரும் சூழலையும், அதனால் நெருக்கடியையும் உருவாக்கியிருப்பது கட்சி நிர்வாகம்தான் என்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டதா என த.வெ.க. நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டபோது, கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளனர். காவல்துறை தரப்பில், அங்கு திரண்ட கூட்டத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பு இல்லை என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள், “கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான செருப்புகள் கிடந்தன. ஆனால், காலி தண்ணீர் பாட்டில்கள் இல்லையே” என்று கேட்டபோது, “பாட்டில்களை தொண்டர்கள் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அதனால்தான் கண்ணுக்குத் தெரியவில்லை” என்று நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். “ஓ.. செருப்பை அங்கேயே கழற்றிவிட்டு, பாட்டிலை மட்டும் ஓரமாகப் போட்டார்களா?” என செருப்படி கேள்வி கேட்டிருக்கிறது சி.பி.ஐ.

41 உயிர்ப்பலிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை. ஒட்டுமொத்த நிகழ்வையும்  சதிக்கோட்பாடாக சித்தரித்து, ஆளுங்கட்சி மீது பழி போடுவதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தினர். தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் இவற்றைத் தவிர்க்கும் வகையில், உச்சநீதிமன்றம் சென்று, சி.பி.ஐ. விசாரணையைப் பெற்றது தமிழக வெற்றிக் கழகம். தற்போது அதன் தலைவரான நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. அமைப்பு.

சி.பி.ஐ. விசாரணை (CBI Investigation) என்பது உடனடியாக முடியக்கூடியதல்ல. நீண்டகாலம் ஆகும் என்பதை பல வழக்குகள் நிரூபித்துள்ளன. அத்துடன், அது பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் என்பதால், விசாரணைக்கு சென்று உளறிய கட்சி நிர்வாகிகளால் சி.பி.ஐ.யிடம் சிக்கியிருக்கிறார் விஜய்.

TAGGED:actor vijayCBI InvestigationCrowd MismanagementDMKKarur MeetingKarur StampedePolitical AccountabilityPolitical RalliesTamil Nadu PoliticstvkVijay Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Refrigerator-Food safety-Health & wellness-Nutritious foods-Fridge mistakes-Health tips-Food storage-Tamil tips குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாத முக்கிய 10 உணவுகள் – பட்டியல் உள்ளே !
Next Article Pet Dogs-Dog Owners-Zoonotic Diseases-Rabies-Pet Care-Human Health-Hygiene Awareness வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை !

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?