IMF வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய நிஜ GDP வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் சீனா முக்கிய பங்களிப்பு வழங்கும் நாடுகளாக மாறியுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா, அமெரிக்காவை முந்தி முன்னேறியுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 17 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் பங்களிப்பை விட அதிகமாகும். சீனா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து உலக வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றும் நாடாக உள்ளது.
அமெரிக்காவை முந்திய இந்தியாவின் வளர்ச்சி
அமெரிக்கா இன்னும் உலகின் பெரிய பொருளாதார சக்தியாக இருந்தாலும், உலகளாவிய வளர்ச்சிக்கு அளிக்கும் பங்களிப்பில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, இளம் மக்கள் தொகை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி ஆகியவை இதற்குக் காரணமாக சொல்லப்படுகின்றன. இந்த நிலைமை, இந்தியா எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.(Online Tamil News)

எலான் மஸ்க் கருத்து
இந்த தரவைப் பார்த்து, “டெஸ்லா” மற்றும் “ஸ்பேஸ் எக்ஸ்” உள்ளிட்ட பெரிய தொழில்துறைக் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதளம் X-ல் (The balance of power is changing) சக்தியின் சமநிலை மாறி வருகிறது என பதிவு செய்தார். அவரின் கருத்தில், உலக பொருளாதார சக்தியாக கடந்த காலத்தில் மேற்கத்திய நாடுகள் பெரும்பங்காற்றி வந்த நிலையில், இப்போது ஆசியாவின் பெரிய பொருளாதார சக்திகள் சீனா மற்றும் இந்தியா முன்னிலை பெற்றது என்று அவர் தெரிவித்தார். இது ஒரு பொருளாதார மாற்றம் என்பதையும், உலக பொருளாதாரத்தின் செல்வாக்கு கிழக்கிலிருந்து வடிகட்டிக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டியலில் உள்ள பிற நாடுகள்
இந்த பட்டியலில் இந்தோனேஷியா, துருக்கி (Turkiye), நைஜீரியா, பிரேசில், வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் உள்ளனர். இவை ஒவ்வொன்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்குகின்றன. ஆனால் சீனா மற்றும் இந்தியாவின் சேர்க்கை அளவு குறிப்பிடத்தக்கதாக அதிகமாக உள்ளது.


