• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Mojtaba Khamenei reward
    உலகம்
    மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
    2026-03-14
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News
    உலகம்
    நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !
    2026-02-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?

Last updated: 2025-05-28 11:14 am
T.R.Kathiravan 195 Views
Share
kamalhasan speech
SHARE

அப்படி ஒன்றும் கமல்ஹாசன் கன்னட மொழியை குறைத்துப் பேசவில்லை.  ஆனால் அவர் கன்னட மொழியை இழித்தும் பழித்தும் பேசியது மாதிரி கன்னடர்கள் கொந்தளிக்கின்றனர்.   தமிழில் இருந்து பிறந்ததுதான்  கன்னட மொழி என்று வரலாற்றைச் சொன்னதற்காக கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கன்னட பாஜக கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன்  போஸ்டர்களை கிழித்துக் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,  ‘’கன்னட சூப்பர் ஸ்டார் சிவன்னா இங்கே என் மகனாக, ரசிகனாக வந்துள்ளார்.  நானும் அவரை சிவன்னா என்றே அழைக்கிறேன். ஆனால் அவருக்கு நான் சித்தப்பா.  

இது அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என் குடும்பம். (சிவராஜ்குமாரைப் பார்த்து) அதனாலதான் அவர் இங்கு ( சிவராஜ்குமார் ) வந்திருக்கார்.  அதனால்தான் பேச்சை ஆரம்பிக்கும் போதே ‘’உயிரே, உறவே, தமிழே’’ என்று ஆரம்பித்தேன்.  தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் (கன்னடம்) பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்’’ என்றார்.

thug life kamalhassan

’’தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் மொழி’’ என்று சொன்னதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் கர்நாடகாவில் போராட்டம் வலுக்கிறது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

‘’தமிழ் உயர்ந்தது; கன்னடம் தாழ்ந்தது என்ற கருத்து கமல் பேச்சில் இல்லை.  திராவிட மொழிக்குடும்பங்களின் உருவாக்க வரலாறு என்ற வரலாறுதான் இதற்குள் இருக்கிறது.  இந்த பின்புலத்தில் கமல்ஹாசன் பேசியதை தவறாக புரிந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.  கமல்ஹாசன் சொன்னதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை’’ என்கிறார் தமிழ்த்துறை பேராசிரியர் வீ.அரசு.

’’வரலாற்று ரீதியாக நாம் எல்லாம் ஒரு திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லி இருக்கிறார்.  தெலுங்கு மொழியில் உள்ள பழமை இலக்கியவாதிகள் கூட தமிழ்தான் மூல மொழி. அங்கிருந்துதான் நாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.  திராவிட மொழிக்குடும்பத்தில் தான் நாம் இருக்கிறோம்.  நமக்குள் ஒரு உறவு இருக்கிறது என்பதை நிலைநிறுத்தித்தான் அவர் பேசி இருக்கிறார்.  ஒரு யதார்த்தத்தை பேசி இருக்கிறார் கமல்.  இதை இருமாநில பிரச்சனையாக  இரு மாநில யுத்தமாக மாற்றிவிட வேண்டாம்  ‘’என்கிறார் திமுக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

maniyarasan

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன்,  ’’கருத்துக்கு கருத்துதான் சரியானது.  ஆனால் கர்நாடகாவில் கமலின் போஸ்டர்களை கிழிக்கின்றனர்.  அவர்கள் தமிழர்கள் எதிர்வினை ஆற்றினால் என்னவாகும்?

 கர்நாடகாவில் மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் இதில் தலையிட்டுப் பேச வேண்டும்.  சில பேர் ரவுடித்தனமாக பேசுவதை/ செய்வதை ஊக்கப்படுத்துவது கர்நாடகத்தில் வழக்கமானது.  காவிரி பிரச்சனையில்  இனப்படுகொலை செய்த கும்பல் அது.  உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்துக்காக தமிழர்களை கொன்றார்கள். 200 பேருந்துகளை கொளுத்தினார்கள். இலட்சக்கணக்கானோர் அதிகளாக ஓடி வந்தனர். 

கர்நாடகாவில் இனவெறி உச்சமாக இருக்கிறது.  இதனால்தான் காலங்காலமாக பெங்களூருவில் வாழும் தமிழர்கள் தமிழ் பேச அஞ்சுகிறார்கள்.  தமிழர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்’’என்கிறார்.

tamilisai soundararajan

ஆனால் பாஜக பிரமுகர் தமிழிசை சவுந்தரராஜனோ, ‘’தமிழ் பெருமையை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன்.  ஆனால் இன்னொரு மொழியைப் பேசும்போது சற்று எச்சரிக்கை தேவை’’ என்கிறார்.

கன்னட பாஜக தலைவர் விஜயேந்திரா,  ‘’கமல் பேசியது அநாகரீகமானது.  அது ஆணவத்தின் உச்சம்.   6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டார்.  கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.’’ என்கிறார்.  

’’தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுவோர் இந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால் இதுதான் உண்மை’’ என்கிறார் விசிக திருமாவளவன்.  

thiruma vck

‘’கமல் பேசியது உண்மை. சத்தியத்திலும் சத்தியம்.  உண்மையை உணராத கூட்டம் எதிர்க்கிறது. தன் இன வரலாற்றை அறியாத கூட்டமாக இருக்கின்றனர். கமல் சொன்னது சரியானது என்று அங்குள்ள வரலாற்று அறிஞர்களும் அறிவர். தெரியாத கூட்டம் செய்யும் பிழைதான் இது’’ என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

siddaramaiah

’’கன்னட மொழிக்கு  நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை.  வரலாறு தெரியாமல் கமல் பேசுகிறார்’’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.          

கர்நாடகாவில் கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் அதே வேளையில் தமிழ்நாட்டில் கமலுக்கு ஆதரவு வலுத்து வருகிறது.

TAGGED:DMKkamalhassan​resistancesimbutamilnaduthuglifethuglife audio lanch
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article kamalhassan simbu சிம்பு இனி உலக நாயகனா?
Next Article who is rapper vedan யார் இந்த வேடன்? சர்ச்சைகளும் பின்னணியும்!

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ponmudi
பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
Apr 2, 2026 at 5:05 pm
NASA Artemis II mission
50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
Apr 2, 2026 at 5:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?