விருதுநகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி, NDA கூட்டணிக்கு புது விளக்கம் கொடுத்தார்.
’’பிரதமர் நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிசாமியும் ஒரு கூட்டணி அமைச்சிருக்காங்க. அதுக்கு பேரு என்.டி.ஏ. கூட்டணி. இதுக்கு நான் வச்சிருக்கிற பேரு என்ன தெரியுமா? national desiverjs aliance. அதாவது அது துரோகிகளின் கூட்டணி. மதுராந்தகம் மாநாட்டில் மோடியின் பக்கத்தில் நின்ற அத்தனை பேரும் துரோகிகள்தான்.

அதில் முதல் துரோகி எடப்பாடி பழனிசாமிதான். துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் டிடிவி தினகரன். டிடிவியை 420 என்று சொன்னவர் எடப்பாடி. இப்போது இருவரும் நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் என்று சொல்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் என்ன ஆட்டுக்குட்டியோட பிள்ளையா? அவர்தான் உண்மையான அம்மாவின் பிள்ளை.
அடுத்த துரோகி அன்புமணி ராமதாஸ். என்னை ஏமாத்திட்டான்னு பெத்த அப்பன் ரத்தக்கண்ணீர் வடிக்கிறாரு. அண்ணாமலைக்கு துரோகம் செய்த நயினார் நாகேந்திரன். ஜி.கே.முப்பனாருக்கு துரோகம் செய்த ஜி.கேவாசன்.
அதனால்தான் துரோகிகளின் கூட்டணி என்று சொல்கிறேன். இந்த கூட்டணிக்கு இன்னொரு பெயர் வச்சிருக்கேன். அது FDA. அதாவது F for fraud. D for Dubakoor. A for acting.’’



