ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார் இயக்குநர் நெல்சன்.
1980களில் உள்ளது போன்ற தோற்றத்தில் ரஜினியும் கமலும் வந்து படப்பிடிப்பு தளத்தில் பலரையும் அசத்தி இருக்கிறார்கள்.

மெக்கானிக் கார் ஷெட்டில் இருந்து ரஜினி, கார் சாவியை ஸ்டைலாக தூக்கிப்போட, அதை கமல் லாவகமாக பிடித்து காரை ஸ்டார்ட் செய்ய, இருவரும் காரில் சீறிப்பாய்வது போன்று படம் பிடித்திருக்கிறார் நெல்சன்.
இரண்டு மாதங்களில் இந்த புரோமோ ரிலீஸ் ஆக இருக்கிறது.



