எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற ஆய்வு நூலுக்காக அவருக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விருது அறிவிப்பு மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாகச் சர்ச்சைகளைத் தாண்டியே சாத்தியமாகியுள்ளது.2025 டிசம்பர் 18 அன்று அறிவிக்கப்பட வேண்டிய இந்த விருது, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தலையீட்டால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) கௌரவத் தலைவராகவும், இடதுசாரி சிந்தனையாளராகவும் ச. தமிழ்ச்செல்வன் இருப்பதாலேயே, அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவருக்கு விருது வழங்கப்படுவது தள்ளிப்போடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
சாகித்ய அகாடமி போன்ற சுயாட்சி பெற்ற அமைப்புகளின் முடிவுகளில் அரசு குறுக்கிடுவது அதன் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எழுத்தாளர்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்த நீண்ட இழுபறிக்கும் விவாதங்களுக்கும் பிறகு, படைப்பு சுதந்திரம் மற்றும் தகுதியின் அடிப்படையில் இன்று அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


