பூவே உனக்காக, சூர்ய வம்சம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சரவணன். பூவே உனக்காக படத்தின் நாயகி சங்கீதாவை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சரவணன் இயக்கத்தில் கடந்த 2008ல் வெளிவந்த படம் சிலம்பாட்டம். அப்பா- மகன் என சிம்பு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தந்தை வேட சிம்புவுக்கு ஜோடியாக சினேகாவும், மகன் வேட சிம்புவுக்கு ஜோடியாக சனாகானும் நடித்திருந்தனர்.

பிரபு, சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யுவன் இசையில் சிம்பு ‘நலம்தானா?’’ என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடலும் இப்பாடலுக்கு சிம்பு ஆடும் நடனமும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருந்தது.

18 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது வரும் பிப்ரவரி 6ம் தேதி அன்று சிம்புவின் பிறந்த தினத்தில் ரீ ரிலீஸ் ஆகிறது.
இது ரீ ரிலீஸ் காலம் ஆச்சே!



