த்ரிஷா விவகாரத்தில் முதலில் தான் வருத்தம் தெரிவித்தது தவறு என்று சொன்ன பார்த்திபன், கடைசியில் தன்னால் யார் மனதும் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக வீடியோ முடிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வீடியோவின் தொடக்கத்தில் த்ரிஷாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.
’’எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்தே தீர வேண்டும். அதற்கு என் பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தே தீர வேண்டும்.

எதுக்குமே பதில் சொல்லாத ஒருத்தவங்க என்னுடைய பேச்சுக்கு பதில் சொன்னதால, நான் ஒரு நீண்ட பதிலை சொல்ல வேண்டியதாகிவிட்டது. மற்றபடி ஐயா நல்லகண்ணு மறைவுக்கு சென்றபோது ( சென்னை தி.நகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் – பாலன் இல்லம்) இறந்த பிறகும் இந்த சமூகத்திற்கு உதவ வேண்டும் என்று அவர் உடல்தானம் செய்திருந்ததை பற்றி பேசினார்கள்.
அப்போது நானும் உடல்தானம் செய்திருக்கிறேன். ரொம்ப வருடங்களுக்கு முன்பே இதைச் செய்திருக்கிறேன் என்று சொன்னேன். நானும் என் மனைவியும் உடல்தானம் செய்திருக்கிறோம்.

உடனே, வேறு யாரெல்லாம் உடல்தானம் செய்திருக்கிறார்கள் என்ற பேச்சு வந்தது. அப்போது த்ரிஷாவின் பெயரைச் சொன்னார்கள். அதைக்கேட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. த்ரிஷாவை அப்போது நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
இவ்வளவு கசப்பான விசயங்களுக்கு மேலேயும் திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி உடல்தானம் செய்ய முன் வந்திருக்கின்ற த்ரிஷாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மற்றபடி நான் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதைப்பற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு முடித்துக் கொள்வதே நமக்கு நல்லது .நன்றி!’’



