பாஜக மற்றும் அதிமுகவை விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் போது, ‘’முதலில் விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியே வரவேடும்’’ என்று சொல்லியது பெரும் சர்ச்சை ஆனது.
பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நயினாரும் கூட இதற்கு வருத்தம் தெரிவிக்காமல் நழுவி வந்தார்.

அருவருக்கத்தக்க வகையிலும் முறையற்ற வகையிலும் பேசி இருக்கிறார் நயினார் நாகேந்திரன். உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும் நிதானத்துடனும் பேச வேண்டும். உயர்பதவியில் இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் விவாதிப்பது என்பது சரியல்ல. எனக்கு தொடர்பில்லாத விசயங்களில் என்னை இழுக்கக்கூடாது என்று த்ரிஷாவே எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசியபோது, ‘’என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்து பேசியதில்லை. எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதித்தது இல்லை. நானும் பேசியது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. ஆனாலும் அது பற்றி வானதி சீனிவாசனும், அண்ணாமலையும் அது குறித்து என்னிடம் பேசி இருந்தார்கள். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டால் என் வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.



