நடிகை ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டு தனக்கு துரோகம் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா. 27 வருட திருமண உறவை முறித்துக்கொண்டு விவாகரத்து கோரியிருக்கிறார் சங்கீதா.

காதல்:
லண்டனைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண் சங்கீதா. விஜய்யின் தீவிர ரசிகை சங்கீதா. இதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார் சங்கீதா. அடிக்கடி இப்படி வந்ததும் இதை புரிந்துகொண்ட சந்திரசேகர் – ஷோபா விஜய்க்கு சங்கீதாவை பேசி திருமணம் செய்து வைத்தனர். 1999 ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்பட திருமணம் நடந்தது.

ரசிகர்களுக்கு விருந்து:
திருமணத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சென்னைக்கு வரவைத்து நேரு ஸ்டேடியத்தில் திருமண விருந்து வைத்தனர்.

குழந்தைகள்:
விஜய் -சங்கீதா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் விஜய் மகன் சஞ்சய், தன் தந்தையுடன் பேச்சுவார்த்தையில் இல்லை என்று அண்மைக்காலமாக தகவல் வந்த வண்ணம் இருந்தன.
மனக்கசப்பு:
நடிகை ஒருவருடன் விஜய் உறவில் இருப்பதால் எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. 2021ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்தான் நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரியவந்தது. நான் கண்டுபித்த பிறகும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம். 2021 முதல் 2022 வரையிலும் வழக்கறிஞர் மூலமாக சுமூகமாக பிரிவது என்று பேச்சுவார்த்தை நடத்தினோம்.

துரோகம் – சித்திரவதை:
’’என் கணவருடன் அந்த நடிகை அடிக்கடி வெளிநாடுக்கு செல்கிறார். வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்களை அந்த நடிகை வெளியிட்டு வருகிறார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கு அவமானத்தை தருகிறது. பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார் விஜய்.
இதை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்திவிட்டார். விஜய் தன்னுடைய திருமண, சமூக, தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். விஜய்யின் நடத்தையால் மனரீதியாக சித்திரவதை அனுபவித்தேன். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவினால் என் குழந்தைகளும் உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் அவமானத்தை சந்திக்கின்றனர்.

தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்’’.

விசாரணை:
விவாகரத்து கோரி தாக்கல் செய்திருக்கும் மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார் சங்கீதா. வரும் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த மனு மீது விசாரணை நடைபெற இருக்கிறது.

சரிந்தது செல்வாக்கு:
விஜய்க்கு பெண்கள் ஆதரவுதான் அதிகம். தேர்தல் நெருக்கத்தில் விவாகரத்து விவகாரம் விஜய்க்கு பெரிதும் பின்னடவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பெண்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு பெரிய அளவில் சரிவை சந்தித்திருக்கிறது.
விஜய் விவகாரம் அவரது ரசிகர்களை பெரிது பாதித்திருக்கிறது. பலரும் சோகத்தில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.(Online Tamil News)



