ஒற்றைத்தலைமை விவகாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவதற்கு பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் சரியான நேரம் பார்த்திருந்த வேளையில், வசதியாக சிக்கியது தர்மர் விவகாரம்.

சி.வி.சண்முகம், ஜெயக்குமார் இருவருக்கும் மாநிலங்களைவை சீட் தரவேண்டும் என்று பழனிசாமி சொல்ல, இருக்கும் 2 சீட்டில் ஒரு சீட் இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி தரப்புக்கு, இன்னொரு சீட் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன் தரப்புக்கு என்று பங்கு பிரித்தார் பன்னீர்செல்வம்.
இதில் தன் ஆதரவாளர் தர்மருக்கு அந்த சீட் கொடுத்தார் பன்னீர். இதில் அதிருப்தி அடைந்த பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமான முயற்சிகள் எடுத்து பன்னீர்செல்வத்தை வெளியேற்றிவிட்டனர்.

இவ்வளவு நெருக்கடிக்கு இடையில் தன்னை எம்.பி. ஆக்கிய பன்னீர்செல்வத்திற்கு சாகும் வரையிலும் உண்மையாக இருப்பேன் என்று சொல்லி வந்த தர்மர், இன்று பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்.
யாரால் அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் வெளியேறினாரோ அவரே பழனிசாமியுடன் கைகோர்க்கிறார். இதுதான் அரசியல்.



