2006ல் விஜயகாந்திற்கு முதல் வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதியில் 2026 களமிறங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்.
2005ல் மதுரையில் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றார். சொந்த மாவட்டம் மதுரையில்தான் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருத்தாசலத்தை தேர்ந்தெடுத்து வென்றார் விஜயகாந்த்.

அடுத்து வந்த 2011 தேர்தலிலும் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நின்று வென்றார்.
திமுக கூட்டணியி 2026 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த வெற்றி திரும்பும் என்று நம்புகிறார் பிரேமலதா.



