எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இயக்குநர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்த பின்னரும், திட்டமிட்டே பார்த்திபன் தன் போட்டோவை அந்த நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்து விஜய்யுடன் நிகழ்ச்சிக்கு சென்றது தவறு என்று பேசியதாக சொல்ல, தான் வருத்தம் தெரிவித்ததே தவறு என்று வெடித்திருக்கிறார் பார்த்திபன்.’
’’அந்த நிகழ்ச்சியில் நான் தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன். உண்மையிலேயே அது தவறித்தான் நடந்தது.

விஜய், அஜித் போட்டோக்கள் வந்தபோது பேசிக்கிட்டே இருந்தேன். திடீரென்று த்ரிஷா போட்டோ வந்ததும் என்ன பேசுவதென்று திகைத்து நின்றேன்.
அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கலைவாணர் அரங்கில் உட்கார்ந்திருந்த நேரத்தில் செல்போனில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், விஜய்யுடன் த்ரிஷா போயிருக்க கூடாது. த்ரிஷாவுக்கு 40 வயசுக்கு மேல ஆகிவிட்டது. நான் வந்தால் உங்க இமேஜ் கெட்டுவிடும் என்று த்ரிஷா சொல்லி இருக்க வேண்டும். மேட்சிங் புடவையே வாங்கிக் கொடுத்தாலும் கூட, நான் புடவையை கட்டிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன் என்று த்ரிஷா சொல்லி இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து சொல்லி இருந்தனர்.

கரூர் பிரச்சனையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்ததே தவிர விஜய்க்கு இவ்வளவு பாதிப்புகள் வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணம் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் இந்த பெண்மணி கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று என் அடிமனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக நான் அந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை.
இவங்க போட்டோவை போட்டு குந்தவை, குந்தவை என்று சொன்னதும் வார்த்தை ஜாலமாக பேசுகிறேன் என்று, குந்தவையை வீட்டிலேயே குந்த வச்சிருக்கலாம். வெளியே வந்தால் பாருங்க எவ்வளவு பிரச்சனை ஆகுது என்று சொல்லிவிட்டேன்.

சிலர் என்னிடம் குந்தவை பற்றி தவிர்த்திருக்கலாம் என்று சொன்னார்கள். நான் பிரச்சனைகளை விரும்பாதவன். அதனால் உடனே வருத்தம் தெரிவித்தேன். அதன் பிறகு நான் பேசியது முட்டாள் தனம் என்று அந்த பெண்மணி சொல்லி இருந்தார். அதற்கப்புறம்தான் நான் ஏன் வருத்தம் தெரிவித்தேன் என்று தோன்றியது?

நான் பேசியது எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மூணாவது மனுசி பற்றி. இந்த பிரச்சனையில் மொத்தம் 3 பேர் என்று எடுத்துக்கொண்டால் முதலில் என் அன்பு நண்பர் விஜய். 2வது இடத்தில் அவரது மனைவி சங்கீதா. கோர்ட் தீர்மானிக்கும் வரைக்கும் அவர் விஜய் மனைவிதான். முக்கியமான ஸ்தானத்துல இருக்கிறார் சங்கீதா. இந்த மூணாவது மனுசி பற்றி பேசவேண்டிய அவசியமில்ல. நான் சொன்னது மூணாவது மனுசி பற்றி. அவுங்க ஒரு மூணாவது மனுசி.
நான் வருத்தம் தெரிவித்தது மனப்பூர்வமாக. ஆனால் , த்ரிஷாவிடம் இருந்து இப்படி ஒரு டுவிட் வரப்போவது தெரிந்திருந்தால் வருத்தமே தெரிவித்திருக்க மாட்டேன்.

ஒரு மூணாவது மனுசியின் மூன்றாம் தர செயல். அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான் இந்த பதிவு. என் செயலுக்கு அவுங்க எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் சமீபகாலமாக அவுங்களைப் பற்றின கொச்சையான, மிக அசிங்கமான நிறைய கருத்துக்கள் பொதுவெளியில் இருக்குது. ஒரு கட்சியோட தலைவர் விமர்சனத்துக்கு அவுங்க பதில் சொல்லி இருக்கலாம். எதுக்குமே சொல்லாம அவுங்க எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவிச்சிருக்காங்க’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.



