தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தருணம் இன்று நிகழ்ந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தங்களது காதல் குறித்து மௌனம் காத்து வந்த ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம், இன்று (பிப்ரவரி 26, 2026) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமெண்டோஸ் (ITC Mementos) நட்சத்திர விடுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இன்று காலை சரியாக 10:10 மணி அளவில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிகவும் நெருக்கமான சுமார் 100 நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி மணவாழ்க்கையில் இணைந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், உதய்பூரில் நெருக்கமானவர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்த கையோடு, வரும் மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் ஒட்டுமொத்தத் திரையுலகினருக்காகவும் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.(Online Tamil News)


