நடிகையுடனான உறவை விஜய் கைவிட மறுத்ததால் பல வருடங்களுக்கு முன்பாகவே குடும்பத்தில் இது பெரிதாக வெடித்திருக்கிறது. அதனால்தான் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். மகளை லண்டனில் படிக்க வைத்து அங்கேயே சங்கீதாவும் வசித்து வந்திருக்கிறார்.
விஜய் நடிக்க வந்த போது அவரின் முதல் பட பூஜைக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என்று திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது. ஆனால் ஜேசன் சஞ்சய் தனது முதல் பட பூஜையின்போது பட தயாரிப்பாளர் மற்றும் பட நிறுவனத்தின் நிர்வாகி மட்டுமே உடன் நின்றனர்.

மகனின் முதல் பட பூஜைக்கு கூட விஜய் வர முடியாத சூழல் இருந்தது திரையுலகில் பலரையும் வருத்தப்பட வைத்தது.
நடிகையுடனான விஜய் உறவு வலுத்துவிட்டதால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் சங்கீதா. இதனால் மறைமுகமாக செய்து வந்ததை வெளிப்படையாக செய்யத் துணிந்துவிட்டார் விஜய். அந்த நடிகையுடன் பொதுவெளிக்கு இணைந்து வர ஆரம்பித்துவிட்டார்.

இதைக்கண்டு வெகுண்டெழுந்த சங்கீதா, விவாகரத்தை விவகாரத்தை வேகப்படுத்தி இருக்கிறார். இதனால் அந்த நடிகைக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, விஜய்க்காகவும், பிள்ளைகளுக்காகவுமே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று சொல்லும் சங்கீதாவை மிகக் கடுமையாக தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கீதா, நடந்தது என்ன? என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசு நினைத்திருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் யோசித்திருக்கிறார். ஒரு ஆங்கில ஊடகம் சங்கீதாவிடம் பேட்டி வாங்கி வெளியிட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

விஜய் செய்யும் தவறுக்காக தன் தாயைப் பற்றி தவறாக பேசுவது கண்டு பொறுக்க முடியாத ஜேசன் சஞ்சய், நடந்தது என்ன? என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தி அங்கே மனம் திறந்து பேச உள்ளார். விரைவில் அந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது.



