2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை மூன்று கட்டமாக வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாம். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் இருந்தனர். இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையும் சேர்த்து 150 பேர் பட்டியலில் உள்ளனர். மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட உள்ளனர்.
அறிவிக்கப்பட்டிருக்கும் 150 வேட்பாளர்களின் 17 பேர் பெண்கள். நடப்பு எம்.எல்.ஏக்கள் 46 பேருக்கு சீட் வழங்கி இருக்கிறார் பழனிசாமி. 31 முன்னாள் அமைச்சர்களுக்கு வ வாய்ப்பு வழங்கி இருக்கிறார் பழனிசாமி. செங்கோட்டையனின் கோட்டை கோபியில் பிரபுவும், ஓபிஎஸ் கோட்டை போடியில் நாராயணசாமியும் களமிறங்குகிறார்கள்.

இதில் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி. இவரது மகன் புதுச்சேரியில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளார். ஐஜேகே கட்சியில் 14 ஆண்டுகள் மாநில இணைப்பொதுச்செயலாளர் ஆக இருந்தார் லீமா.
கடந்த மாதம் 17ம் தேதி அன்று அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ்க்கு அதிமுக மகளிர் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கினார் பழனிசாமி. லீமாவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறார் பழனிசாமி.



