அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று அடித்துச் சொன்னார்.
2026 சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ. ஆட்சி மலரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி சொல்லி வந்ததைத்தான் பிரதமரும் சொன்னார். தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்றே ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும் சொல்லி வந்தார்.

என்.டி.ஏ. தரப்பு இப்படி பிடிவாதமாக இருப்பதால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? என்ற கேள்வி இருக்கும் நிலையில், ‘’தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்’’ என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அதுமட்டுமல்லாமல் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்கும் முடிவிலும் உள்ளார் அவர். ’’அமைச்சரவையில் அமமுகவுக்கு பங்கே வேண்டும் என்று கேட்பேன். அது என் ஆசை. அதற்காக நிபந்தனை எதுவும் விதிக்க மாட்டேன்’’ என்கிறார்.



