சென்னையில் இன்று (மார்ச் 19, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,360 வரை குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்த நிலையில், மாலை நிலவரப்படி மேலும் ரூ. 3,200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 14,000-க்கு கீழ் சரிந்து ரூ. 13,900-ஆக உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று காலையில் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,65,000-க்கும் விற்பனையானது; மாலையில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி மற்றும் சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிந்ததன் காரணமாகவே தங்கம் விலையில் இத்தகைய அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.(Online Tamil News)


