சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் இந்த பென்குயின் வீடியோ, உலக மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவை என்னவென்றால், 2007ஆம் ஆண்டு பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் வெர்னர் ஹெர்சாக், பென்குயின்களைப் பற்றிய ஆவணப் படம் எடுக்க அண்டார்டிகாவிற்கு பயணம் செய்தார். அங்கு பெரும் கூட்டமாக உள்ள பென்குயின்களை கவனித்த போது, அந்த கூட்டத்தில் இருந்து ஒரு பென்குயின் (penguin) தனியாக விலகி 70 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கியது.அந்த பென்குயின் வழிதவறியதாக எண்ணி, அதிகாரிகள் அதை மீண்டும் கூட்டத்துடன் சேர்த்தனர்.
ஆனால் அது மீண்டும் மலைப்பகுதியை நோக்கி நடந்து சென்றது. இந்த வீடியோ, 2007ல்
எடுக்கப்பட்டிருந்தாலும், இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் (social media) வைரலாகி பரவுகிறது. குறிப்பாக சிலர் இதை மீம்கள் உருவாக்குவதற்கான மூலதனமாக பயன்படுத்தி, வேடிக்கையான கருத்துக்களோடு பகிர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில்,சிலர் இதை வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொண்டுள்ளனர். என்னவென்றால் இதேபோன்று ,”ஒவ்வொருவரும் தடையின்றி, இலக்கை நோக்கி நடந்து செல்ல வேண்டும்” என்று கூறி, இந்த குட்டி பென்குயின் வீடியோ மூலம் motivation பெற்றதாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.மேலும் வேலை, கல்வி, தனிப்பட்ட கனவுகள் போன்றவற்றில் தடை வந்தாலும் மனநிலை உறுதியுடன், இலக்கை நோக்கி செல்ல வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.(Online Tamil News)


