’’இதுவரைக்கும் நான் பேசல. இன்னைக்கு நான் பேசுறேன். அம்மா நீக்கி வச்சி ஆள நான் அமைச்சராக்குனேன். கெஞ்சி கண்ணீர் விட்டதால அமைச்சராக்குனேன். இப்ப வாய்க்கொழுப்புல பேசிக்கிட்டு இருக்குறான்.
டேய்…நீ என்ன பத்தி பேசுற.. உனக்கு என்ன யோக்கியத இருக்கு. நீ 100 நாள் ஜெயில்ல இருந்துட்டு வந்த ஆளு. நாக்கு இருக்குன்னு பேசுனா அசிங்கமா போயிடும். அத்தன ஆதாரத்தையும் வச்சிருக்குறேன். விசில் அடிக்குற இடத்துல இருந்தா இப்படித்தான் உனக்கு பேச்சு வரும்.

உனக்கெல்லாம் மரியாதை கொடுத்து பிரயோசனம் இல்ல. மரியாத கொடுக்க தகுந்த ஆள் இல்ல. என்னைக்கு நீ சிறுமையா பேச ஆரம்பிச்சுட்டியோ அன்னைக்கே நீ செல்வாக்க இழந்துட்ட… நீ அரசியல் ரீதியா பேசு நான் பதில் சொல்ல தயார். அத விட்டுட்டு தனிப்பட்ட முறையில பேசுனா… உன்னப்பத்தி நெறய இருக்குது… டீவில போட்டு விட்டுடுவேன். அப்புறம் கோபி வீதியில உன்னால நடமாட முடியாது . அத்தன பேரும் காரித்துப்பிடுவாங்க ஞாபகம் வச்சுக்க. என்னைய நீ விளையாட்டா நினைச்சிடாத. வீக்னஸ் ஆளா எடை போட்டுடாத. நான் முதலமைச்சரா இருக்கும்போது யார் யாரெல்லாம் என்னென்ன பண்ணுனீங்கன்னு எல்லாம் வச்சிருக்கேன். நீ என்னென்ன ஆட்டம் போட்டேங்கிறது எல்லாம் வச்சிருக்கேன். அரசியல் ரீதியா பேசுனா நானும் அரசியல் ரீதியா பதில் சொல்ல தயார். பச்சையா பேச ஆரம்பிச்சுடுவேன். நான் எதுக்கும் தயங்காதவன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது உனக்கே தெரியும்.’’

அதிமுகவில் செங்கோட்டையன் சீனியராக இருந்தார். எடப்பாடி ஜுனியர். ஆனாலும் அதிமுகவை கைப்பற்றி விட்டார் எடப்பாடி பழனிசாமி. இதில் செங்கோட்டையன் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தி. இந்த நிலையில் வெளியேற்றப்பட்டவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று சீனியர் என்கிற முறையில் கொடிபிடித்தார் செங்கோட்டையன். இதில் ஆத்திரமடைந்து அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் எடப்பாடி. இதனால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து மீண்டும் கோபி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பிரபுவை நிறுத்தி இருக்கிறார் எடப்பாடி. தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியும் செங்கோட்டையனும் ஒருமையில் பேசிக்கொள்கின்றனர்.



