மதுரை மத்தி தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர் சி போட்டியிடுகிறார். சுந்தர் சிக்காக அவரது மனைவி குஷ்பு பிரச்சாரம் செய்துவருகிறார். பிடிஆருக்காக நடிகர் பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரகாஷ்ராஜ், எடப்பாடி பழனிசாமி, விஜய்யை விளாசித்தள்ளினார்.
’’இந்த தேர்தல் மூன்று மாடல்களுக்கான தேர்தல். ஒன்று திராவிட மாடல். இன்னொன்று அடிமை மாடல். மூன்றாவது திராவிட மாடல்.
நான் அரசியல்வாதி கிடையாது. எந்த கட்சிக்காரனும் கிடையாது. நான் ஒரு வோட்டர்தான். இந்த மூன்று மாடல்களும் என்ன கொடுக்கும் என்று பேச வேண்டும்.

திராவிட மாடல் என்ன கொடுத்தது? கல்வி கொடுத்தது, இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படி இருக்க வேண்டும் என்ற பெருமையை கொடுத்தது. மொழி மானத்தை காப்பாற்றியது. இன மானத்தை காப்பாற்ற போராடுகிறது. இது திராவிட மாடல்.
அடிமை மாடல் என்பது என்ன? நம் தன் மானத்தை , சுய மரியாதையை தூக்கிக்கொண்டு போய் மோடி காலுக்கு கீழ் வைப்பது அடிமை மாடல். இந்த மாடல் நமக்கு தேவையா? எடப்பாடியோ, படப்பாடியோ. வெட்கம், சூடு, சொரணை என்பது அடிமை மாடலுக்கு கொஞ்சம் கூட கிடையாது.
சினிமா மாடல் என்பது ஒரே சினிமாவில் காசு சம்பாதித்து விடலாம். பெரிய ஹீரோ ஆகிவிடலாம். சினிமாவுக்குள்ள நீ டாக்டராகலாம். முதல்வராகலாம். அரசியல்ல நீ அப்படியே முதல்வர் ஆகிடுவியா நீ? என் அளவுக்கு அரசியல் பேசியிருக்கியாப்பா நீ? இத்தனை வருடங்களில் நீ தமிழ்நாட்டுக்கோ, மொழிக்கோ, மக்களுக்கோ பிரச்சனை வந்த போது வந்து நின்றிருக்கிறாயா? உங்க மேல மக்கள் வச்சிருக்கிற அந்த அன்பு, நட்பு எல்லாமே திரைக்கு. அரசியலுக்கு அல்ல. அதை நீங்க தப்பா பயன்படுத்துறீங்க. வீட்டை கவனிக்காம படிப்பை கவனிக்காம வேலைக்கு போகாம கட் அவுட் வச்சு காட்டுன அன்பை அரசியலுக்கு பயன்படுத்துவீங்களா? புடிச்ச நடிகனுக்கு மூணு விரலை தொண்டைக்குள்ள விட்டு விசிலடிக்கலாம். நாட்டை கொடுக்க முடியாது. அரசியல் வேற, சினிமா வேற.
திராவிட மாடல் வேணுமா? அடிமை மாடல் வேணுமா? சினிமா மாடல் வேணுமா? மக்களே முடிவு பண்ணுங்க’’ என்கிறார்.



