தவெக தலைவர் விஜய் பரப்புரை மற்றும் சாலைவலத்தில் நகைகளை பறிகொடுத்து கதறும் பெண்களில் நிலை தொடர்கிறது.
நாகையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் பெண்ணின் 4 சவரன் சங்கிலி பறிப்பு சம்பவத்தினால் ’’எப்படியாவது என் நகையை மீட்டுக்கொடுங்கள்’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கதறியது பலரையும் கலங்க வைத்தது.

கோவை கணியூர் சாலைவலத்தில் பெண்ணின் 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் பலரின் மோதிரங்கள் பறிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 5 சவரன் நகையை பறிகொடுத்த பெண் கதறி அழுததை பார்த்த பெண்ணை போலீசில் புகார் கொடுக்கச் சொல்ல அவர் கருமத்தம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார்

இந்நிலையில் இன்று சென்னை தி.நகர், ஆயிரம்விளக்கு சாலைவலத்தில் பெண்ணின் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பெண் கதறி துடிக்கிறார்.
இத்தனைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அதையும் மீறி இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.



