பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக ஆளுநருக்கு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் விஜய். இதை அறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ’’தவெக குதிரை பேரம் செய்கிறது. எனது அனுமதி இல்லாமல் என் எம்.எல்.ஏவை தூக்கிவிட்டனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படிச் செய்கிறார்கள் என்றால் இன்னும் ஆட்சிக்கு வந்ததும் என்னவெல்லாம் செய்வார்களோ? தவெக தூய சக்தி என்கிறார் விஜய். அது தூய சக்தி அல்ல, பிராடு சக்தி’’ என்று வெகுண்டெழுந்திருந்தார். இது தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக புகார் கொடுத்திருந்தார்.
ஆளுநரிடம் புகார் கொடுத்தது தெரிந்ததும் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், தினகரனை தொடர்பு கொண்டு அமமுகவை விட்டு போகவில்லை என்று கூறிவிட்டார்.

ஆளுநரிடம் நகல் கொடுத்த தவெக ஏன் அசல் கடிதத்தை கொடுக்கைவில்லை? என்று தினகரன் எழுப்பிய கேள்விக்கு, ஆதரவுக்கடிதத்தில் காமராஜ் கையெழுத்திடும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர் தவெகவினர். இதுதான் தவெகவுக்கு சட்டசிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநரிடம் போலி ஆவணம் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது தவெக என்று தினகரன் குற்றம் சாட்டுகிறார்.
’’ஊழலை ஒழிப்போம் என்று சொல்லும் தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே போர்ஜரி வேலைகள் செய்கிறது. விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு’’ என்று விஜய் மற்றும் தவெகவை மிகக்கடுமையாக விமர்சித்திருக்கிறார் தினகரன்.



