• அரசியல்
    அரசியல்Show More
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
    natham sivasankaran
    இசக்கி சுப்பையா கொடுத்த ரூ.60,000 டோக்கன்! கொந்தளித்த நத்தம் சிவசங்கரன்
    Apr 15, 2026 at 12:51 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    2026-04-17
    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: வார ராசிப்பலன் !
Share
34°C
Chennai
few clouds
36° _ 34°
66%
6 km/h
Fri
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
வார ராசிபலன்

வார ராசிப்பலன் !

Krish Radhai
Last updated: 2026-02-14 6:53 pm
Krish Radhai Krish Radhai 63 Views
Share
Weekly Rasi Palan February 15–21, 2026
SHARE

பிப்ரவரி 15 முதல் 21 வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

15.02.2026 மாசி 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

20.02.2026 மாசி 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

ராசியாதிபதி செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து உங்களது கஷ்டங்கள் குறையும். மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெற காலபைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.

ரிஷபம்  ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் இருப்பார்கள். உங்களுக்கு இருந்து வந்த உடல் ரீதியான பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலமாக ஒரு சில எதிர்பாராத ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொண்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலமாக ஏற்றங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20, 21.

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் சற்று குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் ரீதியான பாதிப்புகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக படிப்படியான வளர்ச்சிகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை விட கல்விக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் சிறப்பு. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக அனுகூலங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள் – 20, 21.

சந்திராஷ்டமம் – 14-02-2026 இரவு 12.42 மணி முதல் 17-02-2026 காலை 09.05 மணி வரை.

கடகம்  ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தேவையற்ற பேச்சை குறைத்து விட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு சிவ வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன் மூலமாக ஏற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16.

சந்திராஷ்டமம் – 17-02-2026 காலை 09.05 மணி முதல் 19-02-2026 பகல் 03.00 மணி வரை.

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். எந்த பிரச்சினைகள் இருந்தாலும் அதனை தைரியத்தோடு கையாண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறைவதால் மன நிம்மதி ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக மன நிம்மதி குறைவது மட்டுமில்லாமல் உடல் ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வது, தேவையற்ற தூர பயணங்களை தள்ளி வைப்பது தற்போதைக்கு சிறப்பு. மாணவ மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் என்றாலும் வீண் பழிச்சொற்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு ஆஞ்சநேய வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.

சந்திராஷ்டமம் – 19-02-2026 பகல் 03.00 மணி முதல் 21-02-2026 இரவு 07.07 மணி வரை.

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஒரு சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பெண்கள் வழியில் ஒரு சில எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் தேவையற்ற பேச்சுகளை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, முருக வழிபாடு செய்வதன் மூலமாக பிரச்சினைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21.

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வளர்ச்சியை அடையக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன் மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 20, 21.

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

ராசியாதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சனி 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் இருப்பதாலும் தொழில் வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வயது மூத்தவர்களிடம் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் எளிதில் அடைய முடியும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத கவலைகள் ஏற்படும். தேவையற்ற தூரப் பயணங்களை வரும் நாட்களில் குறைப்பது நல்லது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஏற்ற மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16.

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாளைய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு இருக்கக்கூடிய சட்ட சிக்கல்கள் தற்போது குறைவதால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். பணி நிமித்தமாக சக ஊழியிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ மாணவியர்கள் முன்பை விட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். ஒரு சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் உங்களது எண்ணங்கள் நிறைவேறுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து நற்பலன்களை பெறுவீர்கள். குருபகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சுப காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக வளமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்ட உண்டு.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 20, 21.

கும்பம்  ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்த்த தன வரவுகள் கிடைப்பதில் தேவையற்ற தடங்கல்கள் உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகப்படியாக இருப்பதால் நீங்கள் போட்ட முதலை எடுப்பதில் இடையூறுகள் ஏற்படும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தடைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவ மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பார்கள். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் அடைவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உறவினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சினைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படக்கூடிய நேரம் ஆகும். செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக மன அமைதி குறையக் கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நேரத்திற்கு சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது தற்போதைக்கு நல்லது. மாணவ மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை விட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 15, 16, 20, 21.

image 5
TAGGED:12 Zodiac Predictions TamilFebruary 2026 HoroscopeMaasi Rasi PalanSuba Muhurtham Days 2026Tamil Astrology WeeklyTamil Panchangam WeeklyWeekly Rasi Palan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan 15.02.2026 இன்றைய ராசிப்பலன் –  15.02.2026
Next Article Today Rasi Palan 16.02.2026 இன்றைய ராசிப்பலன் –  16.02.2026

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay helihaptor
விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Apr 17, 2026 at 12:25 pm
Jananayagan movie leak,
ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
Apr 16, 2026 at 5:43 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?