• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
Share
28°C
Chennai
broken clouds
29° _ 27°
90%
2 km/h
Sat
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்

stalin dmk
Last updated: 2026-05-09 6:31 pm
T.R.Kathiravan 2 Views
Share
SHARE

சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்து வருகிறது.  ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவர் விஜய், மக்கள் ஆணைப்படி ஆட்சியமைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்.  இன்றைக்கும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது குறித்தும் அவர் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.

’’என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. 

Vijay politics controversy,

ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.

அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.

எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோர்த்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

Against Delimit

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.  தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.

மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’’

TAGGED:mk stalinonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ttv dinakaran ammk விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?