தமிழகத்தில் 2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அதிமுகவை என்.டி.ஏ. கூட்டணிக்குள் வைத்துக்கொண்டே அண்ணாமலை சொன்னதை எப்படித்தான் ரசிப்பார் எடப்பாடி. கூட்டணியில் இருந்து கொண்டே ஜெயலலிதா சிறை சென்றதையும் அண்ணாமலை விமர்சித்தது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு எழுந்தது இது போன்று பல சலசலப்புகளை எழுப்பி கடந்த தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து பழனிசாமி விலக காரணமாக இருந்தார் அண்ணாமலை. இதனால் இந்த 2026 தேர்தலில் அவரை ஓரங்கட்டிவிட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை கொண்டு வந்த தலைமை.

மாநில தலைவர் பதவி போனாலும் அண்ணாமலைக்கு என்று ஒரு ஆதரவாளர் கூட்டம் இருக்கிறது. அவருக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. விருகம்பாக்கம், சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த விலகல் என்பது தந்தையின் உடல்நிலை கருதியா? இல்லை, நயினார் நாகேந்திரன் உடனான உள்ளடிகளின் காரணத்தினாலா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தவிர, அண்ணாமலை விலகினாரா? விலக்கப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அண்ணாமலையினால் கடந்த தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியவில்லை. அவர் இருந்தால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று நயினாரும் எடப்பாடியும் அமித்ஷாவிடம் சொன்னதால், தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை அமித்ஷா விலக்கி வைத்திருக்கிறார் என்கிறார் எஸ்.வி.சேகர்.
அதனால்தான் வரும் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூட அண்ணாமலை தெரிவிக்கவில்லை.



