தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமல்படுத்தலாம் என்றால் 10 லட்சம் கோடி கடன் இருக்குது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதை கடுமையாக கண்டிக்கிறார்.
மறைமலைநகரி நடந்த நாதக கூட்டத்தில் அவர் பேசியபோது… ’’மேல வந்து உட்கார்ந்திட்டு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்குதாம். அது தெரியாமதான் முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா? காலக்கொடுமடா சாமி. முதலமைச்சர் ஆன பிறகுதான் அவருக்கு தெரியுது 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்குதுன்னு. நல்லவேளை என்னை தோற்கடிச்சு உள்ள வரவிடாம விட்டான். நல்வாய்ப்பாக தப்பிச்சு போயிட்டாங்க. நான் உள்ள போயிருந்தேன்… ஒரு ஐந்தாரு பேரோடு உள்ளே வந்திருந்தேன்.. மொத்த பேரும் வெளியேதான் இருக்கணும். மக்கள் ஒங்கமேல பாவம் பார்த்து விட்டுட்டாங்களான்னு தெரியல.

கடன் 10 லட்சம் கோடி இருக்குது. இதுல மேலும் இலவசங்கள் கொடுக்கணும்னா மேலும் 10 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு லட்சம் கோடி வட்டி கட்டணும். அதனால இலவசங்களை நிறைவேற்ற முடியாதுன்னு சொன்னேன். நீங்க கேட்கல. கொடுக்க முடியாது என்று தெரிந்தும் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதுதான் மக்கள் துரோகம், மக்கள் விரோதம். நாங்கள் உண்மையைச் சொன்னோம்; தோற்றுப்போனோம். மேன்மையாக கருதுகிறோம். 2500 ரூபாய் தர்றேன்னு சொல்லிட்டு இப்ப காசு இல்லேங்குறீங்க? அதுகூட தெரியாம எதுக்கு வந்தீங்க? ஆண்டுக்கு 6 சிலிண்டர் கொடுப்பேன்னு சொல்லி இருக்கீங்க? ஒருவேளை போரிட்டு ஈரானையோ ஈராக்கையோ கைப்பற்றினால்தான் அது முடியும். ’’



