தொலைக்காட்சி விவாதங்களில் மறக்க முடியாத விவாதம் யாகவா முனிவர் – சிவசங்கர் பாபா விவாதம்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவி விவாதத்தில் இருவரும் கட்டி உருளாத குறையாஆ ஒருவரை மாற்றி ஒருவர் பேசிக்கொள்வர்.

பின்னாளில் இந்த விவாத பாணியில்தான் மயில்சாமியுடன் இணைந்து காமெடி காட்சியை அமைத்திருப்பார் நடிகர் விவேக். அந்த காமெடியும் மக்களிடையே மிகப்பிரபலம்.
இப்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் சன் டிவி அப்படி ஒரு நேருக்கு நேர் விவாதத்தை அரங்கேற்றி இருக்கிறது.

சசிகலாவின் ஆதரவாளர் தேனி கர்ணனும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் நேருக்கு நேர் விவாதத்தில் கட்டு உருளாத குறையாக மோதிக்கொள்கின்றனர்.
’’தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவன் என்றால் ஒரே தலைவன் அது உங்கள் தலைவன் தான்’’ என்று பழனிசாமி ஆதரவாளரைப் பார்த்து கர்ணன் சொல்ல, ’’அதப்பத்தி கவலைப்படுறதுக்கு நீங்க யாருய்யா? அம்மா சொன்ன மாதிரி நீங்க தூக்கி எறியப்பட்ட டேஸ்…?’’ என்று பழனிசாமி ஆதரவாளர் கேட்கிறார்.
மீண்டும் பழனிசாமி ஆதரவாளர், ‘’ பல்லு போனது சொல்லு போனது..’’ என்று சொல்ல, ‘’யாருக்கு சொல்லு போச்சு’’ என்று ஆவேசமாகிறார் கர்ணன்.

அதுக்கு பழனிசாமி ஆதரவாளர், ‘’முதல்ல உன் மேல வழக்கு போடணும். அதிமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு வந்திருக்க…’’ என்று சொல்ல, ‘’இது என் வேட்டி.. என் வேட்டி… ‘’ என்று ஆவேசமாகிறார் கர்ணன்.
இதில் இருவருமே ஆவேசமாகி அடித்துக்கொள்கின்றனர். ’’வேட்டிய அவுத்துப்புடுவேன்’’ என்று பழனிசாமி ஆதரவாளர் சொல்ல, ‘’அவுத்துப்பாருடா’’ என்று வேட்டிய மடிச்சுக்கட்டுகிறார் கர்ணன்.

‘’உன்னை மாதிரி காட்டான் அல்ல நான். படிச்சவன்’’ என்று பழனிசாமி ஆதரவாளர் சொல்ல, ‘’உன் மூஞ்ச உடைச்சி புடுவேன்’’ என்று கர்ணன் ஆவேசம். ’’ஊழல் செஞ்சிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்திட்டு தியாகத்தலைவியாம்.. தியாகத்தலைவியாம்..’’ என்று பழனிசாமி ஆதரவாளர் சொல்ல, ’’உங்களுக்கு எல்லாம் பதவி கொடுத்த தியாகத் தலைவிடா’’ என்று ஆத்திரப்படுகிறார் கர்ணன்.
’’உன்கிட்ட பேசுறதே கேவலமா இருக்கு’’ என்று பழனிசாமி ஆதரவாளர் சொல்ல, ‘’உன்கிட்ட பேசுறதே அசிங்கமா இருக்கு’’ என்று கர்ணன் சொல்கிறார்.



