ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கிறது கோபாலபுரம். இந்த பகுதியில் இருக்கிறது கே.ஏ.கிருஷ்ணசாமி வீடு. அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர் கே.ஏ.மதியழகன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக இருந்தவர். இவரது தம்பிதான் கே.ஏ.கிருஷ்ணசாமி.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது கட்சியின் இரண்டாவது உறுப்பினர் கே.ஏ.கிருஷ்ணசாமி. அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தென்னகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் மூன்று முறை வென்றவர் கே.ஏ.கிருஷ்ணசாமி. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவரின் மகன் முகில். அதிமுக இளைஞரணி பொறுப்பில் இருக்கிறார்.

இந்த முறை இவருக்குத்தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட பழனிசாமி வாய்ப்பு தர வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில், தனது வயது முதிர்வை காரணம் காட்டி அடுத்த தேர்தலில் எல்லாம் போட்டியிட முடியுமா என்று தெரியவில்லை. அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் இந்த முறை நான் நிற்கிறேன் என்று வளர்மதி செண்டிமெண்டாக பேசியதால் அவருக்கு கொடுத்திருக்கிறார் பழனிசாமி. தனக்கு வர வேண்டிய வாய்ப்பு பறிபோனதில் ரொம்பவே அப்செட்டில் உள்ளார் முகில். இவருக்கே சீட் கொடுக்கலையா என்று அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.



