பிரபல தயாரிப்பாளரும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவரும், சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், நடிகருமான கே.ராஜன் நேற்று சென்னை அடையாறில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராஜன் எடுத்த இந்த விபரீத முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில் அவரது மகன்கள் மற்றும் மகள் அதை எல்லாம் மறுக்கின்றனர். தங்களது தந்தை இந்த முடிவுக்கு செல்ல காரணம் சினிமாவில் கடன் வாங்கியவர்கள் திரும்ப பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். பல வருடங்களாக இந்த மன உளைச்சலில் அப்பாவுக்கு ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அந்த மன உளைச்சல் அதிகமாகவே தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

பல திரைப்பட விழாக்களில் பேசியபோது கூட, தன்னிடம் கடன் வாங்கிய சினிமா பிரமுகர்கள் திரும்ப கொடுக்கவில்லை. வட்டியும் கட்டவில்லை என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். இப்போது குடும்பத்தினரும் அதே காரணத்தைச் சொல்கின்றனர்.



